புது ப்ளாகரில் பழைய பின்னூட்டங்கள் - தீர்வு
நான் படித்ததில் நல்லதை இங்கே அதை அப்படியே தருவதில் எனக்கு சந்தோஷம் தான் நன்றி: கைமண் அளவு முன்குறிப்பு: சொந்தக்கதை கேட்க விரும்பாதவர்கள் அடுத்த மூன்று பத்திகளை விட்டுவிடலாம்.என் பதிவின் வார்ப்புரு நீளமான இடுகைகளை வாசிப்பதற்கு வசதியாக இல்லை என்று நலம் விரும்பிகள் சிலர் தெரிவித்ததால் வழக்கமாக இம்மாதிரி விஷயங்களில் எனக்கு இருக்கும் சோம்பலை ஒரங்கட்டிவிட்டு புது ப்ளாகருக்கு மாறினேன். அப்படியே புது ப்ளாகர் அளிக்கும் புது வார்ப்புருவுக்கும் மேம்படுத்திக் கொண்டேன். மாறிய பின் பழைய பதிவுகளைப் பார்த்தால் பின்னூட்டம் இட்டவர்களது பெயர்கள் தமிழில் இருந்தால் அவை சரியாகத் தெரியவில்லை. இது குறித்து ப்ளாகர்/கூகிள் நிறுவனத்துக்கு முன்பே அறிவிக்கப்பட்டுவிட்டது என்றும் அவர்கள் தற்போது எதுவும் செய்வதற்கு இல்லை என்று கையை விரித்து விட்டதாகவும் அறிந்தேன். இந்நிலையில் தமிழ்மண முகப்பில் சுட்டி அளிக்கப்பட்டிருந்த கோபியின் பதிவைப் பார்த்தேன். அவர் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வாக ஒரு நிரல் துண்டை அளித்திருந்தார். அதை வெட்டி என் வார்ப்புருவில் இட்ட பின் வார்ப்புருவை சேமிக்க முடியவில்லை. மர்மமான XML Error அறிவிப்புகள் வந்துக் கொண்டிருந்தன. XML, Javascript போன்றவற்றில் எவ்வித அறிமுகமும் இல்லாத எனக்கு (நான் தொழில்முறை மென்பொருளாளன் அல்ல) அவற்றை விளங்கிக் கொள்வது கடினமாக இருந்தது. பிறகு ஒருவழியாக error தகவலுக்கான காரணத்தைக் கண்டறிந்தேன். (XML-ல் <, >, & போன்ற சில சிறப்புக் குறிகளை அப்படியே நிரலில் (script) பயன்படுத்துவது குழப்பத்தை விளைவிக்குமாம். அவற்றுக்குப் பதில் முறையே <, >, & என்று எழுதவேண்டும்.) இவற்றை எல்லாம் சரிசெய்த பின்னும் பழையப் பின்னூட்டங்களை இட்டவர்களது பெயர்கள் தெரியவில்லை. பிறகு கோபியின் பதிவில் அவரது பின்னூட்டங்களைப் பார்த்தபோது அவர் புது ப்ளாகருக்கு மாறிய பின்னும் Classic Template எனப்படும் பழைய வார்ப்புருவையே பயன்படுத்துகிறார் என்பது தெரிந்தது. அப்படி பழைய வார்ப்புருவைப் பயன்படுத்துவோருக்கு அவரது நிரல் தீர்வாக அமையக் கூடும். ஆனால் பெரும்பாலானாவர்கள் புது ப்ளாகருக்கு மாறியபின் புது வார்ப்புருவுக்கு மேம்படுத்திக் கொண்டுவிட்டனர். அவர்களுடைய பதிவில் இந்த நிரல் துண்டு வேலை செய்யாது என்பதை சில மணிநேரங்கள் மெனக்கெட்ட பின் சர்வ நிச்சயமாக அறிந்துக்கொண்டேன். ஏன் வேலை செய்யாது என்பதும் புரிந்தது. வேலை செய்யக்கூடிய ஒரு நிரல் துண்டை நாமே எழுதிவிடலாம் என்ற எண்ணம் மூளையில் ஏறியது. அப்படி எழுதியது சரியாகச் செயல்படுகிறது என்பதற்கு என் பழையப் பதிவுகளில் உள்ள பின்னூட்டங்களில் அட்சர சுத்தமாகத் தெரியும் பெயர்களே ஆதாரம். இந்த நிரல் புது ப்ளாகரில் புது வார்ப்புருவுக்கு மேம்படுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே. பின்னூட்டமிட்டவரது பெயர் ஆங்கிலம், தமிழ் அல்லாத வேறு மொழிகளில் இருந்தால் தெரியாது. இந்த தீர்வு தமிழ் பெயர்களுக்கு மட்டுமே. நீங்கள் செய்யவேண்டியது: 1. வார்ப்புருவின் Edit HTML tab-க்கு செல்லுங்கள். "Expand Widget Templates" என்றக் கட்டத்தை தேர்வு செய்துக் கொள்ளுங்கள். கீழே உள்ள நிரல் துண்டை வெட்டி உங்கள் வார்ப்புருவில் என்ற இடத்துக்கு மேலே ஒட்டுங்கள். 3. வார்ப்புருவை சேமியுங்கள். பழைய பின்னூட்டங்களை இட்டவர்களது பெயர்கள் இப்போது சரியாகத் தெரியும். பி.கு: இந்த தகவல்களை நீங்கள் தாராளமாக எங்கு வேண்டுமானாலும் மறு பிரசுரம் செய்யலாம்.

No comments:
Post a Comment