Tuesday, October 17, 2006

அமெரிக்காவிற்கு தலையாய கடமை

சமீபத்திய செய்திகளை கேட்டால் வெட்கமாகவும் வேதனையாகவும் இருக்கும் காரணம் ஒரு காலத்தில் தினமல(ம்)ர் போன்ற பத்திரிக்கைகளெல்லாம் அமெரிக்காவிடம் அப்படி ஆயுதம் உள்ளது இப்படி ஆயுதம் உள்ளது என்றெல்லாம் அதாவது ஒரு சேட்லைட் பூமிக்கு மேலே சுற்றுகின்றது அது பாறைக்கு அடியில் யாராவது பதுங்கி இருந்தாலும் அதன் வெப்ப அளவை கணக்கிட்டு அது மனிதனின் வெப்பமா? அல்லது வேறு மிருகங்களின் வெப்பமா? என்றுகூட கணக்கிட்டு செய்தி அனுப்பும் என்றெல்லாம் மாயாவி படம் போல ரீல் விட்டு இருந்தது. ஆனால் அது உண்மையிலேயே ரீல்தான் என்பதை உலகம் ஒவ்வொரு நாள் விடிந்ததும் புரிந்துகொண்டேதான் உள்ளது அமெரிக்காவிற்கும் பிணங்களான அதன் அடிவருடிகளுக்கும் மட்டும் வேண்டுமானால் புரியாமல் இருக்கலாம் ஆனால் உலகம் உயிருடன் தான் இருக்கின்றது என்பதற்கு தினமும் வெளியாகும் பத்திரிக்கை செய்திகளே சாட்சி. அதற்கு துள்ளியமான ஒரு உதாரணம்தான் சமீபத்திய செய்தி அதாவது உஸ்ஸாமா பின் லாடன் இறந்து விட்டார் உலகைக்குழுக்கும் இந்த செய்திதான் அது. உஸ்ஸாமா இருக்கின்றாரோ இல்லையோ ஆனால் அவர் உயிருடன் இருக்கின்றார் என்று சொல்வது அமெரிக்காவிற்கு நிர்பந்தம். உஸ்ஸாமா இறந்து விட்டார் என்று அமெரிக்கா ஒத்துக்கொண்டால் அதன் மறுபுறத்திலிருந்து பிறகு உனக்கு இங்கு என்ன வேலை என்ற கேள்வியையும் அமெரிக்கா எதிர்கொள்ள வேண்டிவரும். அ ப்படி மக்கள் கேட்டுவிட்டால் தங்களின் கூலிப்படைகளை ஆப்கானின் மலைப்பகுதிகளில் நிறுத்திக்கொண்டு ஆசியாவின் எதிர்கால வல்லரசாக உருவாக இருக்கும் இந்தியாவையும் சீனாவையும் வேவு பார்ப்பது எப்படி. அதனால் உஸ்ஸாமா பின் லாடன் இறக்கவில்லை என்று மூச்சு முட்ட கத்தவேண்டிய தலையாய கடமை அமெரிக்காவிற்கும் அதன் எச்சி இலை பொருக்கிகளுக்கும் உள்ளது.

No comments: