Thursday, July 26, 2007

ஃபிர்அவ்னுடைய கூட்டத்தார்

பூமியில் ஒவ்வொரு சமுதாயமும் அழிக்கபடும் பொழுதும் அல்லது அழியும் பொழுதும் அந்த சமுதாயம்தான் அழியுமே தவிர அதன் தன்மைகள் அழிவதே இல்லை. அது பின் தலைமுறையினரை தொடர்ந்தோ அல்லது பின் தலைமுறையினர் அதனைத் தொடர்ந்தோ செய்துகொண்டுதான் இருக்கின்றனர்.
அந்த வரிசையில் வருவதுதான் நான் கீழே தந்த தலைப்பும். இந்த தலைப்பிற்கு இஸ்லாமிய சரித்திரத்தில் மிகபெரிய வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. இன்று பாலஸ்தீனில் நடக்கக்கூடிய ஜீரணிக்க முடியாத காரியமாக இருக்கட்டும் மேலும் இஸ்லாமிய நாடுகள் மீது ஏகாதிபத்திய நாடுகள் செய்யக்கூடிய அடாவடித்தனமாக இருக்கட்டும் இந்த சம்பவங்கள் இஸ்லாமிய சரித்திரத்தில் புதிய விஷயம் ஒன்றும் இல்லை ஆனால் இந்த தலைமுறையினருக்கு வேண்டுமானால் புதிதாக இருக்கலாம்.
அல்லாஹ் தன் திருமறையில் அந்த சரித்திரத்தைக் கூறுகின்றான் இதோ கவனியுங்கள் 14:6 மூஸா தம் சமூகத்தாரிடம் ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரிடமிருந்து (அல்லாஹ்) உங்களைக் காப்பாற்றிய போது, அல்லாஹ் உங்களுக்குப் புரிந்த அருள் கொடையை நினைத்துப் பாருங்கள் அவர்களோ, உங்களைக் கொடிய வேதனையால் துன்புறுத்தியதுடன், உங்களுடைய ஆண் குழந்தைகளை அறுத்(துக் கொலை செய்)தும் உங்கள் பெண்மக்களை (மட்டும்) உயிருடன் விட்டுக் கொண்டும் இருந்தார்கள் - இதில் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு மகத்தான சோதனை (ஏற்பட்டு) இருந்தது என்று கூறினார்.
28:4 நிச்சயமாக ஃபிர்அவ்ன் இப்பூமியில் பெருமையடித்துக் கொண்டு, அந்த பூமியிலுள்ளவர்களைப் (பல) பிரிவினர்களாக்கி, அவர்களிலிருந்து ஒரு கூட்டத்தாரை பலஹீனப்படுத்தினான் அவர்களுடைய ஆண் குழந்தைகளை அறுத்(துக் கொலை செய்)து பெண் குழந்தைகளை உயிருடன் விட்டும் வைத்தான் நிச்சயமாக அவன் குழப்பம் செய்வோரில் ஒருவனாக இருந்தான். 40:25 ஆகவே, அவர் நம்மிடமிருந்து சத்தியத்தை அவர்களிடம் கொண்டு வந்த போது, அவர்கள் இவருடன் ஈமான் கொண்டிருப்போரின் ஆண் குழந்தைகளை கொன்று, அவர்களின் பெண் குழந்தைகளை உயிருடன் விட்டு விடுங்கள்' என்று கூறினார்கள் மேலும் காஃபிர்களின் சதி வழிகேட்டிலன்றி வேறில்லை.
அந்த இஸ்ரேல் சமுதாயம் இன்றும் அதே குணமும், தன்மையும் மாறாமல் நடந்துகொண்டும் நடத்திக்கொண்டும் இருப்பதைத்தான் இந்த சரித்திரம் கூறுகின்றது அதே ஃபிர் அவ்னுடைய கூட்டம்.