மனிதனே நீயும் மனிதனா
யுத்தங்கள் இன்று நேற்றல்ல மனிதன் தோன்றிய காலம்தொட்டு இன்றுவரை மனிதன் சண்டையிட்டுக்கொண்டே இருக்கின்றான் இதை முஸ்லிம்கள் தெளிவாக புரிந்து வைத்துள்ளோம் காரணம் மனித சமூகத்தின் முதல் தந்தை ஆதம்(அலை) அவர்களின் மகன் தான் பூமியில் முதல் கொலை செய்ததாக குர்ஆன் சான்று பகர்கின்றது. அ தனால் மனிதன் சக மனிதனோடு சண்டையிடுவது காலாகாலமாக உள்ள ஒரு விஷயம் இதற்கு காரணம் சகிப்புத்தன்மையின்மையும் பொறுமையின்மையும் தான். அன்றுமுதல் இன்றுவரை பெண்ணுக்காகவும், பொன்னுக்காகவும் மட்டுமே யுத்தங்கள் நடத்தப்பட்டுள்ளது.
ஆனால் நாம் தற்பொழுது வாழ்வது கல்தோன்றா மண்தோன்றா கற்காலத்தில் அல்ல. ஆணோடு ஆண், பெண்ணோடு பெண் உடலுறவு கொள்வது தவறில்லை என்று சொல்லக்கூடிய விஞ்ஞான??? காலத்தில் இருக்கின்றோம். ஒரு பெண் உடையில்லாமல் வெற்றுடம்போடு தெருவில் போவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று போராடும் காலகட்டம். பெண்ணுக்கு கற்பப்பை சுதந்திரம் வேண்டும் என்று எழுதினால் அப்படிப்பட்ட தரங்கெட்டவளுக்காக வக்காலத்து வாங்கக்கூடிய வேறொரு நாடு தன் நாட்டின் குடிமக்களின் வரிப்பணத்தில் அந்த பெண்ணுக்கு பாதுகாப்பு கொடுக்கின்றது (இந்த நாட்டில் மனிதர்கள் தான் வாழ்கின்றார்களா என்பது சந்தேகமாக உள்ளது.) அவளை மிகப்பெரிய எழுத்துக்காரி என்ற பட்டமும் கொடுக்கின்றது அப்படிப்பட்ட பொற்காலத்தில் நாம் வாழ்கின்றோம். மனிதன் விஞ்ஞானத்தைப் படித்தான் ஆனால் மனிதத்துவத்தைப் படிக்க மறந்துவிட்டான்.
தனக்கு வலிப்பது போல்தான் மற்றவருக்கும் வலிக்கும் என்று நினைத்துப் பார்க்கவில்லை அதன் பின்விளைவுதான் அமெரிக்காவில் இறந்தவர்களுக்கு ஆதரவு அஞ்சலி செலுத்தும் புஷ்ஷுக்கு ஆப்கானில் மரணித்து விழக்கூடியவர்களும் மனிதர்கள்தான் என்பதை மறக்கச்செய்துவிட்டது. உஸாமா என்ற ஒரு மனிதனுக்காக ஆப்கான் சல்லடையாக்கப்பட்டது அங்கு இறந்து விழுந்தவர்களும் மனிதர்கள்தானே, (அவருடைய ஒரு கால் முடியைக்கூட கண்டுபிடிக்க முடியவில்லை ஐயோ பரிதாபம் அமெரிக்கக் கூலிப்படை) சதாம் உசேன் என்ற ஒரு மனிதனுக்காக சின்னாபின்னமாக்கப்படுகிறது ஈராக்.
அங்குவந்ததோ உலகையே அழிக்கும் வல்லமையுள்ள ஆயுதம் உள்ளது என்று கூறி, ஆனால் அதன் வாடையைக்கூட காட்டமுடியவில்லை (இதே காரணம்தான் இன்று ஈரானுக்கும் சொல்லப்படுகின்றது இவர்களுக்கு டிவி முன்பு தோன்றி இதுபோன்ற பொய்களை சொல்வதற்கு வெக்கப்படுவதில்லையோ என்ன மனித ஜென்மமோ) அங்கு மடியக்கூடியவர்களும் மனிதர்கள்தான். இப்படி இவர்களின் உடலும் உள்ளமும் மரத்துப்போனதற்கு காரணம் சுயநலமும், மற்றவர்களை கேவலமாக கருதுவதுமே.
பேசி தீர்க்கவேண்டிய விஷயமெல்லாம் யுத்தம் என்று நிற்கவேண்டியவர்கள் கொஞ்சம் யோசிக்கவேண்டும். யுத்தத்தால் பாதிக்கப்படுகின்றவர்கள் சாதாரணத்திலும் சாதாரணமானவர்கள் அன்றாடம் காச்சிகள். வீடோ பொருளோ நஷ்டப்பட்டால் மீட்டெடுக்க வழியில்லாதவர்கள் இப்படிப்பட்டவர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவது தாயை இழந்த பிள்ளைகள் எத்தனைபேர், உறவையிழந்த உறவுகள் எத்தனை இதற்கெல்லாம் யார் பொறுப்பு.