Wednesday, April 18, 2007

நம் இந்தியாவில் தானா?

கேட்க வெட்கமாக உள்ளது உலகிலேயே சரியான சட்டதிட்டங்கள் கொண்ட நாடு இந்தியாதான் என்ற பெறுமை நமக்கெல்லாம் உள்ளது என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கின்றோம். நம்மை வெளிநாடுகளிலும் அப்படித்தான் சொல்லக் கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் நம் நாட்டில் நடக்கக்கூடிய சம்பவங்களை நினைத்தால் வேதனையாக உள்ளது காஷ்மீரில் இந்தியா பட்டாளம் செய்யக்கூடிய எண்கவ்ண்டர் என்ற அராஜகம் ஒருபுறம். சவப்பெட்டியில் கூட ஊழல் செய்யக்கூடிய அரசியல் வாதிகள் ஒருபுறம். கிரிக்கெட்டுக்கும் தேசப்பற்றுக்கும் வித்தியாசம் தெரியாத அராஜகக் கூட்டத்தின் அட்டூழியம் ஒருபுறம். எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு இந்திய பிரஜையை இந்திய குடிமகனை விசாரணைக் கைதி என்று எந்த வழக்குமே இல்லாமல் ஒன்பது ஆண்டுகாலம் சிறையில் அடைத்து வைத்திருக்க முடியும் என்றால் இந்திய அரசியல் சட்டத்தில் எங்கோ ஓட்டை உள்ளது என அதை முழுமையாக நம்புகின்ற சாதாரண மக்களுக்கு எண்ணத்தோன்றுகின்றது. உலகமே பார்த்துக்கொண்டு இருக்கும் பொழுதே பாபரி பள்ளியை இடித்தவர்கள் சுதந்திரமாக உலாவரும் பொழுது ஒரு பாவமும் செய்யாதவர்கள் மட்டும் ஒன்பது ஆண்டுகாலமாக எந்த குற்றமும் நிரூபிக்கப்படாமல் சிறைச்சாலைக்குள் இதையெல்லாம் ஒரு சாதாரண அறிவு கொண்டவன் சிந்தித்தால் முடிவு என்ன? அதற்கு யார் காரணம்? இந்தியா ஜனநாயக நாடு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை ஆனால் நடக்கக்கூடிய சம்பவங்கள் இந்தியாவில் தானா ????? இது போன்ற அநியாயத்திற்காக ஒருமித்த குரல் இல்லையெனில் !நேற்று அவன்! !!இன்று நான் !! !!! நாளை நீ !!! என்ற தொடர் கதையாக மாறும்.